தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை கடந்த மார்ச் 16 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இருந்தும் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் ஒரு நாள் தேசிய அடையாள அட்டை வழங்கும் சேவை தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவூத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோணா பரவலுக்கு மத்தியிலும் பணிகள் ஆரம்பித்துள்ளதால் சேவையை பெற்றுக் கொள்ள வரும் மக்களின் நெரிசல்கள் தொடர்ந்தும் அதிகரிக்கும் என்ற காரணத்தால் இத் தீர்மானம் பிறப்பிக்கப்பட்டுள்ளது அத்துடன் பரீட்சைகள் நேர்முகப் பரீட்சைகள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளுதல் கடவூச்சீட்டிற்கு விண்ணப்பித்தல் போன்ற செயற்பாடுகள் காரணமாக தேசிய அடையாள அட்டை தேவைப்படுவதால் பிரதேச செயலகத்தின் ஊடாக தேசிய அடையாள அட்டை வழங்கும் சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment