20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.பாராளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குழுநிலை விவாதத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பிலும், இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் கிடைத்த அதே எண்ணிக்கையிலான வாக்குகள் திருத்தத்திற்கு ஆதரவாகக் கிடைத்தன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன், ஆளுந்தரப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
No comments:
Post a Comment