கல்முனைப் பிராந்தியத்தின் 13 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு (5) சனிக்கிழமை பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளரலுவலகத்தில் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தலைமையில் நடைபெற்றது. தொற்றாநோய்ப்பிரிவின் பொறுப்புவைத்தியஅதிகாரி டாக்டர் நாகூர் ஆரிப் விளக்கவுரை நிகழ்த்தினார். பிராந்தியத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்போம் என அனைவரும் ஒன்றாகச்சேர்ந்து பொதுப் பொறிமுறை ஒன்றினை உருவாக்கினார்கள்..மக்களும் ஒத்துழைப்பு வழங்கினால் இது நிச்சயமாக அடையப்படும்.அத்துடன் நியுடயமண்ட் பனாமா கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கரையோர மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் தெளிவு படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment