இன்று விபுலாநந்த சமாதி அருமம்பொருட்காட்சியமாக்க அடிக்கல்நடுவிழா - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, August 14, 2020

இன்று விபுலாநந்த சமாதி அருமம்பொருட்காட்சியமாக்க அடிக்கல்நடுவிழா

 


இ.கி.மிசன் மட்டு. கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதி அமைந்துள்ள வளாகத்தை அரும்பொருட் காட்சியகமாக மாற்றியமைப்பதற்கு இராமகிருஷ்ண மிஷனால் தீர்மானிக்கப்பட்டதற்கமைய அதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

பூஜை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா ஜி இ உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி ஆகியோரின் தலைமையில் அடிக்கல் நட்டுவைக்கப்பட்டது.

இதற்கு மட்டுமாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் அங்குள்ள மிசன் அபிமானிகளஒ; மற்றும் காரைதீவிலிருந்து சென்ற மிசன் அபிமானிகள்  அனைவரும் கலந்துகொண்டனர்.அடிக்கல்நடுவிழா நிறைவடைந்ததும் சுவாமிஜகளின் சமாதிக்கு மலரஞ்சலி நிகழ்த்தப்பட்டது.அங்கு ஊடகங்களுக்கு சுவாமிகள் கருத்துரைத்தனர்.

அதனைத்தொடர்ந்து சுவாமி விபுலாநந்த மணி மண்டபத்தில் சிறுகூட்டமொன்று நடாத்தப்பட்டது. அதில்  மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா ஜி இ உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி மட்டு.விபுலாநந்த நூண்றாண்டுவிழாச்சபைத்தலைவர் க.பாஸ்கரன்  காரைதீவு சுவாமி விபுலாநந்த பணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரும் உரையாற்றினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.