ஒரு நிமிடக் கதை ! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, July 7, 2020

ஒரு நிமிடக் கதை !

ஒரு பெண் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் “நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடத் தருகிறேன்” என்றாள்

அதற்கு அவர்கள், “வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா?” என்று கேட்கிறார்கள்.
“வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்”.
“அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம்” - என்று கூறுகிறார்கள். மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்ததும் நடந்ததை கூறுகிறாள். அதற்கு அவன், “நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்து வா” என்கிறான். 

அவள் வந்து மூவரையும் அழைக்கிறாள், அதற்கு அவர்கள். “நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது” என்கிறார்கள்.
“ஏன் அப்படி?” என்று அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து. “இவர் செல்வம்” என்றும், மற்றொருவரை காண்பித்து. “இவர் வெற்றி” என்றும், “நான் அன்பு” என்றும் கூறி. “உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல்” என்று அவளிடம் கூறுகிறார்.

அந்த பெண் கணவனிடம் வந்து முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..அதை கேட்ட கணவன், மகிழ்ந்து, நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று மனைவியிடம் கூறுகிறான்.

ஆனால், மனைவியோ, நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கலாமே என்கிறாள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? கூறுகிறாள்.

மகளின் ஆசைப்படி அன்பை வீட்டிற்கு அழைக்க கணவனும், மனைவியும் முடிவு செய்கின்றனர். அதன்படி, மனைவி, வீட்டிற்கு வெளியே வந்து, முதியவர்களைப் பார்த்து, உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வரவேண்டும் என்கிறாள்.

அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்? நான் அன்பை மட்டும் தானே அழைத்தேன் ? என்கிறாள். 
அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். 

ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!
அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.  

நன்றி கவிடர்மி

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.