சீனாவை அச்சுறுத்தும் அமெரிக்க போர் கப்பல்கள்: தென் சீனக் கடல் விவகாரத்தால் வலுவடையும் மோதல்கள்..!! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, July 7, 2020

சீனாவை அச்சுறுத்தும் அமெரிக்க போர் கப்பல்கள்: தென் சீனக் கடல் விவகாரத்தால் வலுவடையும் மோதல்கள்..!!

அமெரிக்கா சீனாவுடன் ஏற்பட்ட பிரச்சனைகள், கொரோனா விவகாரம், ஹாங்காங் பிரச்னை என அமெரிக்கா சீனா இடையே பல்வேறு விஷயங்களில் மோதல் நீடிக்கிறது. இந்த சூழலில் தென் சீனக் கடல் விவகாரமும் பூதாகரமாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தென் சீனக் கடல் எல்லையில் அமெரிக்க போர்க் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், அமெரிக்க கப்பல்களை ஏவுகணை கொண்டு தாக்கி அழிப்போம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் சீனக் கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுடன் மோதலில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. தென் சீனக் கடலை சீனா ஆக்கிரமிக்கக் கூடாது என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் அமெரிக்கா, யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் ஆகிய இரண்டு போர்க் கப்பல்களை தென் சீனக் கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.

அணு ஆயுத ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட இந்த போர்க் கப்பல்கள் தென் சீனக்கடல் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதே தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா எதிர்பார்க்கவில்லை. எனவே அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா அந்தப் பகுதியை நோக்கி DF -21D, DF 26 என்ற இரண்டு ஏவுகணைகளை எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. போர்க் கப்பல்களை தாக்கி அழிப்பதற்கென்றே சீனாவால் உருவாக்கப்பட்டவை இந்த ஏவுகணைகள். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடகமான குளோபல் டைம்ஸ் இதழில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர், அமெரிக்க அணு ஆயுத போர்க் கப்பல்களை ஏவுகணை கொண்டு தாக்கி அழிப்போம் என கூறியுள்ளார். சீனாவின் இந்த நகர்வுகள் அமெரிக்காவை கோபமடைய வைத்துள்ளது.

இதற்கு பதில் கொடுத்துள்ள அமெரிக்கா, தென் சீனக்கடல் பகுதியில் சர்வதேச கடல் எல்லையில் மட்டுமே தாங்கள் இருக்கிறோம், சீனா எல்லையில் நுழையவில்லை என தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பிறகு அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை தென் சீனக் கடல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. சீனாவின் போர்க்கப்பல்களுக்கு அருகிலேயே அமெரிக்கா கப்பல்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.