போரலெஸ்கமுவாவில் உள்ள ஜான் கோத்தலவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் இயங்கி வரும் எரியூட்டி அலகு ஒன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் (ஈ.பி.எல்) அல்லது அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவ உரிமம் பெறப்படாத நிலையில் இயங்கி வருவது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களாக இது தொடர்பான தேடலின் போது மத்திய சூழல் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் திண்மக்கழிவு முகாமைத்துவ பணிப்பாளர்கள் ஆகியோர் மேற்குறிப்பிடப்பட்ட உரிமங்கள் பெறப்படவில்லை என உறுதிப்படுத்தினர்.
அத்துடன் இது தொடர்பாக சிலாவத்தை பெரேரா மாவத்தை போன்ற பிரதேசங்களில் வசிக்கும் ஒரு குழு சமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அப்பகுதியில் புகை வெளியேறுதல் மற்றும் அருவருப்பான மனங்கள் வெளியேறுவதாக புகார் அளித்திருந்தனர் இதனைத் தொடர்ந்து அவ் வைத்தியசாலைக்கு Team Eye குழுவினர் இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெறுவதற்கு சென்ற போது Team Eye குழுவினரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதுடன் குறித்த தகவல்களை பெறுவதற்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment