சொகுசு காரொன்றும், சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில், சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சொகுசு காரை இலங்கை அணி வீரர் குசல் மென்டீஸ் செலுத்தியிருந்ததுடன், சம்பவத்தை அடுத்து அவர் பாணந்துறை போலீஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குசல் மென்டீஸ், இன்றைய தினம் வரை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
சம்பவத்தில் பாணந்துறை - கொரகபொல பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது.
No comments:
Post a Comment