டிக்டாக் தடையால் சீன நிறுவனத்துக்கு 45,000 கோடி ரூபாய் இழப்பு.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, July 6, 2020

டிக்டாக் தடையால் சீன நிறுவனத்துக்கு 45,000 கோடி ரூபாய் இழப்பு..

இந்தியாவில் டிக்-டாக் மீது விதிக்கப்பட்ட தடையால், அதன் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.45,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என சீன அரசு ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியயுள்ளது.

சீன செயலிகளை தடை செய்யும் இந்திய அரசின் முடிவால் டிக்-டாக், ஹலோ செயலி ஆகியற்றின் தாய் நிறுவனமான 'பைட்-டான்ஸ்'-க்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும். செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும் 'சென்சார் டூவர்' நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரப்படி, கடந்த மே மாதம் டிக்-டாக் செயலி 11.2 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட் டுள்ளது என சீன அரசு ஊடக மான 'குளோபல் டைம்ஸ்' கட்டுரையை மேற்கோள் காட்டி இந்து தமிழ் திசை கூறுகிறது.

டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை

டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் தடையால் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்- சீனா அறிக்கை

அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்யப்பட்டதை விட இரு மடங்கு இந்தியாவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு தடை விதித்ததால், சீன முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் நம்பிக்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிக்-டாக் செயலிக்கு முக்கிய வருவாய் ஆதார நாடாக இந்தியா இல்லாவிடினும் அந்த செயலியை அதிகம் பதிவிறக்கம் செய்த முன் னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்திய சந்தையில் பைட்-டான்ஸ் சுமார் ரூ.7,473 கோடி முதலீடு செய்துள்ளது என்கிறது அந்தச் செய்தி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.