மங்கோலியாவில் மர்மோட் வகை அணிலை சாப்பிட்டதால் சிறுவன் ப்ளேக் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில நாடுகளில் வெவ்வேறு புதிய தொற்றுகள் பரவி வருவதாக வெளியாகும் செய்திகள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் மங்கோலியாவில் ப்ளேக் நோய் தொற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் மங்கோலியாவில் மர்மோட் எனப்படும் அணில்களால் ப்ளேக் பரவுவதாக கருதும் மங்கோலிய சுகாதாரத்துறை அவ்வகை அணில்களை உண்பதற்கு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கோபி அல்தோய் மாகாணத்தில் மர்மோட் அணிலை சாப்பிட்ட சிறுவன் புபோனிக் ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளான். இதனால் சிறுவனுடன் தொடர்பில் இருந்த 15 பேரை தனிமைப்படுத்தியுள்ளனர். இந்த தொற்று வேறு எங்கும் பரவிடாமல் இருக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment