ஒபாமா, பில்கேட்ஸ் உள்பட பிரபலங்களின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக்: பிட்காயின் கும்பலின் வேலையா? - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

வியாழன், 16 ஜூலை, 2020

ஒபாமா, பில்கேட்ஸ் உள்பட பிரபலங்களின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக்: பிட்காயின் கும்பலின் வேலையா?

உலகின் முக்கிய பிரபலங்களான ஜோ பிடன், பராக் ஒபாமா, பில் கேட்ஸ் உள்பட பல விவிஐபிக்களின் டுவிட்டர் கணக்குகள் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுபிட் காயின் கும்பல்கள் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து அதன்மூலம் 1000 டாலர் கொடுத்தால் 2000 டாலருக்கு பிட்காயின் அனுப்பப்படும் என போலியான மெசேஜ்களை அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் , டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க், ஜோ பிடன், மைக் ப்ளூம்பெர்க்ம் உள்பட பல பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்ட்டதாக தெரிகிறது
இந்த பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட பிட்காயின் குறித்த போலி மெசேஜ்களை நீக்கியுள்ள டுவிட்டர் நிர்வாகம், இதுகுறித்து விசாரணை செய்து வருவதாகவும், விரைவில் இதற்கான சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.