Stroke எனப்படும் பாரிசவாதத்துக்கு, உரிய நேரத்துக்குள் சிகிச்சையளிப்பதன் மூலம் நோயாளிகளை அங்கவீனத்திலிருந்து பாதுகாக்க முடியும். இன்நோயை பின்வரும் FAST பொறிமுறையை பயன்படுத்தி இலகுவாக கண்டறியலாம்.
F - முக சமச்சீரற்ற தன்மை அல்லது பலவீனம் (facial asymmetry or weakness)
A - கை பலவீனம் (arm weakness)
S - பேச்சு தொந்தரவு (speech disturbance)
T - மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நேரம் (time to take to hospital)
தற்பொழுது, இந்த பாரிசவாதத்துக்கான உடனடிச்சிகிச்சையானது தள மருத்துவமனை கல்முனை (வடக்கு) ல் பொது வைத்தியர் (VP) டாக்டர் N.இதயகுமார் அவர்களின் வழிகாட்டலாலும் வைத்திய அத்தியட்சகர் (MS) R.முரளீஸ்வரன் அவர்களின் முயற்சியினாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான மேலதிக தகவல்களை டாக்டர் A.A.M அசார்ட் (SHO) அவர்களின் பின்வரும் காணொளியில் இருந்து பெறலாம்
தொடர்புகளுக்கு:
தள மருத்துவமனை கல்முனை (வடக்கு)
தொலைபேசி - (067) 222 9261
நீட்டிப்பு - 308
No comments:
Post a Comment