டெக்ஸாமெதாசோன் எனப்படும் மலிவான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டானது, COVID-19 நோயாளிகளிடையே உயிரைக் காப்பாற்ற கூடியது என்று நிரூபிக்கப்பட்ட முதல் மருந்தாக மாறியுள்ளது. இதை கொரோனா வைரஸ் விடயத்தில் இரு ஒரு பெரிய முன்னேற்றம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட சோதனை முடிவுகளின்படி, ஆர்த்ரிடிஸ் போன்ற பிற நோய்களில், வீக்கத்தைக் குறைக்கப் பயன்படும் டெக்ஸாமெதாசோன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட COVID-19 நோயாளிகளில் மிகவும் மோசமான நோயாளிகளில் இறப்பு விகிதத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துள்ளது.
தொற்று நோய் கடுமையாக தாக்கியுள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்படலாம் என்று முதற்கட்ட முடிவுகள் தெரிவிப்பதாக சோதனைகளுக்கு தலைமை தாங்கிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆராய்ச்சியின் முழு விவரங்களையும் விரைவில் வெளியிடஉள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சில விஞ்ஞானிகள் தங்களும் ஆதாரங்களை மறுஆய்வு செய்ய விரும்புவதாகவம் கூறியுள்ளனர்,
No comments:
Post a Comment