சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க கூறுகையில்,
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் மருத்துவமனைகளின் வெளிநோயாளிகளின் நடத்தை திருப்தியற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த இடங்களில் பலர் ஒருவருக்கொருவர் முட்டிய நிலையில் நெருக்கமாக நடமாடடுவதுடன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை எனவும் தெரிகிறது என அவர் தெரிவித்தார்.
ஒரு பயணி இருந்த இருக்கையில் இன்னொரு பயணி அமர்ந்து பயணிப்பதன் விளைவையும், குறிப்பாக பயணிகள் போக்குவரத்தில் முகமூடி அணிவதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் இந்த பகுதிகளில் சுகாதார வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்படாத பல சிக்கலான பகுதிகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டதுடன். இவ்வாறான சுகாதார நடவடிக்கைகள் எதிர்வரும் தேர்தலில் மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்
No comments:
Post a Comment