விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போரை மையமாக கொண்டு என்னை கைது செய்ய முடியாது என கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது குறித்து தகவல் தெரிவிக்கையில்...
கடந்த காலத்தில் ஆனையிறவு மற்றும் கிளிநொச்சி பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட போரை நான் வழி நடத்தினேன் என்ற விடயத்தில் மாற்று கருத்து இல்லை என்பதோடு தற்போது தான் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து ஜனநாயக வழியில் தனது செயற்பாடகளை முன்னெடுத்துக் கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பணம் மட்டும் ஆயுதங்களை வழங்கியது பிரேமதாசா அரசாங்கமே. அத்துடன் போரின் போது போலீசாரை சரணடைய சொன்னதும் அவர்களே என்பது நான் நன்கு அறிந்த கடந்த கால விடயங்களில் ஒன்றாகும்.
அத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகினேன் இது அனைவரும் அறிந்த விடயமாகும். தற்போது என்னை கைது செய்யுமாறு வலியுறுத்தும் அரசாங்க கட்சிகள் பாரிய ஒரு தவறை அரங்கேற்றத் எத்தனிக்கிறது.
கடந்த கால யுத்தத்தில் இரு தரப்பினரும் தான் உயிரிழந்தனர் இது அனைவரும் அறிந்த உண்மையான விடயமாகும். அத்துடன் முனனாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவர்கள்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் நலிவாக இருந்த காலத்தில் ஒரு லட்சம் ரொக்கமும் வெடி மருந்துகளும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்..
No comments:
Post a Comment