கல்முனை பிராந்தியத்தில் டெங்கு - பூச்சியல் ஆய்வு எதிர்வு கூறல். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, June 4, 2020

கல்முனை பிராந்தியத்தில் டெங்கு - பூச்சியல் ஆய்வு எதிர்வு கூறல்.




கல்முனை பிராந்தியத்தில் எதிர்வரும் மாதங்களில் டெங்கு நோயின் வீரியம் அதிகரிக்கலாம்; பூச்சியல் ஆய்வு எதிர்வு கூறல்.

  • டெங்கு வைரஸ் கொவிட் - 19 வைரஸை விட வீரியமானதாகும்.
  • டெங்கு ஆனது கொவிட் - 19 ஐ விட ஆட்கொல்லியாகும்.
  • டெங்கு நோயினால் நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை 22 பேர் மரணித்துள்ளனர். கொவிட் - 19 இனால் 11 பேரே மரணித்துள்ளனர்.
  • டெங்கு நோயினால் நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை 20000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கொவிட் - 19 இனால் 1600 பேரே பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோயினால் இவ்வருடத்தில் இதுவரை 840 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள துடன் 2 பேர் வரை இறந்துள்ளனர்.
  • டெங்கு வைரஸ் ஆனது கொவிட் - 19 வைரஸை விட வீரியமானதும் ஆட்கொல்லியுமாகும்.

எமது பூச்சியல் ஆய்வு முடிவுகளின் பிரகாரம், கல்முனை பிராந்தியத்தில் பெரும்பாலான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடந்த ஆண்டுகளை விட இந்த வருட இரண்டாம் காலாண்டு பகுதியில் டெங்கு நுளம்பின் பெருக்கம் பல மடங்கு அதிகரித்து காணப்படுவதனால் எதிர்வரும் மாதங்களில் கல்முனைப் பிராந்தியத்தில் டெங்கு நோயின் வீரியம் அதிகரிப்பதுடன் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை காலத்தின் போது பெரும்பாலான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் என்றும் இல்லாதவாறு டெங்கு நோய் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய (Outbreak ஏற்படுத்தக் கூடிய) வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதை பொது மக்களுக்கு முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கின்றோம். 

கல்முனைப் பிராந்தியம் எதிர் கொள்ளப் போகும் டெங்கு அனர்த்தத்திலிருந்து பிராந்தியத்தை பாதுகாப்பதில் பொது மக்களின் விழிப்புணர்வும் நூறு வீத பங்களிப்பும் இன்றியமையாததாகும். எனவே, பொது மக்கள் தமது வீட்டுச் சூழல் மற்றும் வீட்டின் உள் பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அழித்தல், குறைத்தல், திருத்துதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் தங்களது பாடசாலைகளையும், மதஸ்தாபனங்களையும், காரியாலயங்களையும் டெங்கு நுளம்பு பெருகாவன்னம் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.


=================================
இனிவரும் மூன்று மாதங்களில் நாம் கரிசனை காட்டாவிட்டால்,
அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு சிரமப் படுவதுடன் உறவுகளையும் இழந்து தவிக்க நேரிடும்.
=================================



கே.ஏ.ஹமீட்
சுகாதார பூச்சியல் உத்தியோகத்தர்,
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமணை,
கல்முனை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.