1990 வன்முறையில் கணவனை இழந்த வீரமுனை விதவைகளுக்கு கனடா அகவம் அமைப்பினர் கொரோனா நிவாரணமாக ஒரு தொகுதி உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தது.
திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கமூடாக கனடா அகவம் அமைப்பின் அனுசரணையில் அம்பாறை மாவட்ட சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவற்றை வீரமுனை விதவைகளுக்கு வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வு வீரமுனை விதவைகள் நலன்புரிச்சங்கத்தலைவி பி.சுசீலா தலைமையில் எளிமையாக அவரது வீட்டுமுற்றத்தில் நேற்றிரவு நடைபெற்றது.(காரைதீவு நிருபர் சகா)
No comments:
Post a Comment