வாழ்க்கை என நான் எண்ணி
வாழ்கையிலே
அதை அர்த்தமுள்ளதாய் மாற்றிட
அகராதியாய் நீ வந்தாய்

தர்க்கங்கள் பல புரிய நேரிடினும்
அதை எனக்காய் நித்தம் நீ பொறுத்து
நான் சிக்கலெனும் கடலில் மூழ்கும் முன்னே
அதை எனக்காய் நித்தம் நீ பொறுத்து
நான் சிக்கலெனும் கடலில் மூழ்கும் முன்னே
என்னை கரிசனையுடன்கரைசேர்த்தாய்

வெற்றியெனும் மகுடம் நான் சூடிட
பல இன்னல்கள் சுமந்து உன்
தேவைகளுக்கு விலங்கிட்டுக் கொண்டாய்
பல இன்னல்கள் சுமந்து உன்
தேவைகளுக்கு விலங்கிட்டுக் கொண்டாய்

என் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்
உணர்வானாய் அகங்காரம்
கொண்டு நான் வாழ்ந்திட
அனைத்தையும் வழிநடத்தும்
அச்சாரமாய் நீயானாய்
உணர்வானாய் அகங்காரம்
கொண்டு நான் வாழ்ந்திட
அனைத்தையும் வழிநடத்தும்
அச்சாரமாய் நீயானாய்

சென்ற பிறவியில் நான் செய்த
புண்ணியத்தின் பயனிதுவோ
என்றெண்ணி நித்தமும் கவலை கொள்கிறேன்
இக்கடன் தீர்ப்பதெப்போது என
என் முதற் குழந்தையானவனே........
புண்ணியத்தின் பயனிதுவோ
என்றெண்ணி நித்தமும் கவலை கொள்கிறேன்
இக்கடன் தீர்ப்பதெப்போது என
என் முதற் குழந்தையானவனே........
No comments:
Post a Comment