திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய சங்காபிஷேக சடங்கு / கிரியைகள் தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகளுடனான சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் சம்பந்தமான பொதுமக்களுக்கான அறிவித்தல்.
கிழக்கிலங்கையில் அற்புதச்சிறப்புடன் விளங்கும் ஆலயமான திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலயத்தின் சங்காபிஷேக சடங்கு /கிரியைகள் எதிர்வரும் 10.06.2020 அன்று மு.ப. 8.30 - பி.ப. 2.00 மணி வரை மேற்கொள்வது தொடர்பாக திருக்கோவில பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 09.06.2020 காலை 11.30 மணிக்கு நடைபெற்ற கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
தீர்மானங்கள்:
- இவ்வருட சங்காபிஷேக சடங்குகளின்போது பொதுமக்கள் பங்குகொள்ளுமL எந்த ஒரு நிகழ்வும் இடம்பெற மாட்டாது.
- பாற்குட பவனியானது மட்டுப்படுத்தப்பட்ட 15 - 20 பேர் வரை சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து சகலகலை அம்மன் ஆலயம் வரை செல்ல அனுமதிக்கப்படுவதுடன் நேர்த்தியை நிறைவேற்றியவுடன் ஆலய வளாகத்திலிருந்து ஒன்றுகூடாமல் வெளியேறல் வேண்டும்.
- பாற்குட பவனியானது காலை 8.30 மணிக்கு திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதியினூடாக சென்று சகலகலை அம்மன் ஆலயத்தினைச் சென்றடையும்
- பூசை நிகழ்வுகளில் (சங்காபிஷேகம்) ஆலயநிர்வாகம் உட்பட 15 பேர் கலந்துகொள்ள முடியும்.
- அன்னதான நிகழ்வுகளிற்கு அனுமதி வழங்கப்படவில்லை
- ஆலய சங்காபிஷேக நிகழ்வுகள் அனைத்தும் பி.ப. 2.00 மணியளவில் நிறைவு பெறும்.
முக்கிய குறிப்பு
- வழமை போல் நடைபெறுகின்ற கடைகள் மற்றும் வேறு வியாபார நிலையங்கள் எதுவும் ஆலய வளாகத ;திற்குள்ளேயும் வெளியேயும் நடாத்த அனுமதிக்கப்படவில்லை.
- குறித்த காலப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பிரதேச சபை, பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவர்.
- இந்நிகழ்வுகள் அனைத்திலும் சுகாதார முறையிலான முகக்கவசம் அணிதல், கை கழுவுதல் சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற நடவடிக்கைகள் கட்டாயமானதாகும்.
- மேற்குறித்த தீர்மானங்கள் யாவும் அரசாங்கத்தால் விடுக்கப்படும் மாற்றங்களுக்கேற்ப மாற்றப்படலாம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
இந்த கட்டுப்பாடுகளானது எமது பிரதேச மக்களை COVID - 19 தொற்று ஏற்படாமல் காப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது.
தகவல் : COVID - 19 தடுப்பு செயலணிக்குழு, திருக்கோவில்.
No comments:
Post a Comment