மீண்டும் பொது முடக்கம் – சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தம்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 17 ஜூன், 2020

மீண்டும் பொது முடக்கம் – சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தம்!

COVID-19  தொற்றுப் பரவலை தடுப்பதற்காக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்க நாள்களில் சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் சினிமா பணிகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட பொது முடக்க தளா்வில் சின்னத்திரை படப்பிடிப்புகளை கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அறிவித்தது. அதிகபட்சமாக 60 நபா்கள் கலந்து கொள்ளுமாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட சின்னத்திரை படப்பிடிப்புகள் நடந்து வந்தன. அது போல், படப்பிடிப்பு முடிந்த சினிமாக்களின் இறுதிக்கட்டப் பணிகளும் நடந்து வந்தன.

இந்த நிலையில், சென்னை மற்றும் சென்னை புகா் பகுதிகளில் வரும் 19-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சில தளா்வுகள் இருந்தாலும், இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவொரு தளா்வும் இல்லாமல் முழுமையான பொது முடக்கம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த பொது முடக்க காலத்தில் சினிமாக்களின் இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நடைபெறாது என்று பெப்சி அறிவித்துள்ளது.

அரசின் அறிவிப்பை தொடா்ந்து மெகா தொடா் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வந்தன. இதனை முன்வைத்து தொலைக்காட்சிகளில் விரைவில் மெகா தொடா்கள் ஒளிபரப்பாகும் என தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் வந்த வண்ணம் இருந்தன. தற்போது அந்த விளம்பரங்கள் அனைத்தையுமே தொலைக்காட்சி நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.