ஜனாதிபதியை நெகிழ வைத்த சம்பவம் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, June 5, 2020

ஜனாதிபதியை நெகிழ வைத்த சம்பவம்


குறித்த சிறுமி ஒருவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில்   கொரோனாநோய் தொற்றிலிருந்துநமது நாட்டைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் நன்றி தெரிவித்ததோடு தான் சேகரித்த சிறுதொகை பணத்தையும்   கொரோனா நிதியத்திற்குஅனுப்புவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 கடிதம்  ஜனாதிபதியின் கரம் சென்றவுடன் கடிதத்திற்கு பதிலாக தனது பேஸ்புக் பக்கத்தில்    இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்

 அன்புக்குரிய மகள்


 நாட்டின் எதிர்கால சந்ததி என்ற ரீதியில் எனது சேவையை பாராட்டியமைக்கு நான் முதலாவதாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் உங்கள் பங்களிப்பை 


 கொரோனா நிதியத்திற்குஅனுப்பியமை குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் உங்களைப்போன்ற இலங்கை குழந்தைகளுக்கு எங்கள்   தாய்நாடு ஒப்படைக்கப் படுவதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி அதிகாரத்தை உங்களைப் போன்ற தேச பக்தி கொண்ட எதிர்கால சந்ததிக்கு வாழக் கூடிய பொருத்தமான சமூகத்தையும் பொருளாதாரத்தையும் கலாச்சார ரீதியாக முன்னேறிய நாட்டை உருவாக்க பயன்படுத்துவேன் என உறுதி அளிக்கின்றேன் குழந்தைப் பருவம் என்பது நம் வாழ்வின் மகிழ்ச்சியான காலங்களில் ஒன்றாகும் அதனை கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்த பயன்படுத்தி இலங்கையின் பெயரை உயர் மட்டத்திற்கு உயர்த்தக்கூடிய புதுமைகளை நீங்கள் தேட வேண்டும் உங்கள் அனைத்து நடவடிக்கைகளும்  வெற்றி கொள்வதற்கு எனது ஆசீர்வாதத்தை வழங்குகிறேன் நாம் எங்கள் நாட்டை நேசிப்போம்  எங்களுக்கு வரும் அனைத்து தடைகளையும் ஒன்றிணைந்து வெற்றி கொள்வோம் என ஜனாதிபதி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் 


No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.