14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் விளக்கமறியலில் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, June 5, 2020

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் விளக்கமறியலில்அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டுக்காக இளைஞர் ஒருவரும் மற்றும் இரு சந்தேகநபர்களும்விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி பாலமுனை திராய்க்கேணி பகுதியில் வசித்து வந்தபோது அப்ப தேசத்தில் உள்ளவர்களின் முறைப்பாட்டுக்கு அமைய போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் இவ்விடயம் ஊர்ஜிதமானது

குறித்த சந்தேகநபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி குறித்த குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் உறவினர்கள் இருவருக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.