சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள நாவிதன்வெளி - 1 ஐச் சேர்ந்த பெண்கள் தலைமை தாங்கும் 30 குடும்பங்களுக்கு சேலைகள் மற்றும் மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.
சுவிஸ் வாழ் திரு. திருமதி யோகநாயகம் தம்பதிகளின் சபுதல்வன் குபேரன் என்பவரின் 23வது பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட அன்பே சிவத்தின் இனணப்பாளர்களான ரவி மற்றும் வினோஜ்குமார் ஆனால் வழங்கி வைக்கப்பட்டது. கடந்த கொரோனா அச்சத்தால் நாளாந்த தொழில் பாதிக்கப்பட்ட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அன்பே சிவம் அமைப்பினால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment