தமிழர் பொருளாதாரஅபிவிருத்தி கண்டால் மட்டுமே தீர்வு! ஜக்கியமக்கள்சக்தி வேட்பாளர் வினோகாந். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, June 25, 2020

தமிழர் பொருளாதாரஅபிவிருத்தி கண்டால் மட்டுமே தீர்வு! ஜக்கியமக்கள்சக்தி வேட்பாளர் வினோகாந்.தமிழர் பிரதேச வளங்களை நாம் முறையாகப் பயன்படுத்தவில்லை. உண்மையில் தமிழர்கள் பொருளாதாரரீதியாக அபிவிருத்தி கண்டால் மட்டுமே எமக்கான தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் அம்பாறை மாவட்ட ஒரேயொரு தமிழ்வேட்பாளரான வெள்ளையன் வினோகாந்  தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு கோளாவில் கிராமத்தில் ஜ.ம.சக்தியின் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்:

திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 20ஆயிரம் தொடக்கம் 25ஆயிரம் ஏக்கர் வரை வேளாண்மை நில ங் கள் நீர்ப்பாசனமின்றி தரிசு நிலங்களாகக்கிடக்கிறது. 1969இல் கல்லோயா வலதுகரை நீர்ப்பாசனத்திட்டத்தின்கீழ் இந்த பாகுபாடு காட்டப்பட்டதனால் இப்பிரதேசம் நீரின்றி தவிக்கிறது. அதற்கு நீர்ப்பாசனத்தை ஏற்படுத்த எமது தலைவர்  அமைச்சர் சஜித்திடம் திட்டமுள்ளது.

அதுமட்டுமல்ல இப்பிரதேசத்திலுள்ள சுமார் 20ஆயிரம் கறவைப்பசுக்களின் பாலை குறைந்தவிலையில் கொழும்புக்கு ஏற்றுமதிசெய்கிறோம். அதனைநிறுத்தி இங்கு ஒரு பால்கோவா மைசூர்; பாகு யோகட் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவி அதனுடாக எமது மக்களுக்கு வேலைவாய்ப்பையும் உயர்ந்தவருமானத்தையும் ஏற்படுத்தமுடியும்.

அம்பாறை மாவட்டத்தில் 125 தமிழ் கிராமசேவையாளர் பிரிவுகளுள்ளன. அவற்றில் பலவற்றிற்கு முறையான குடிநீர்; குழாய்வசதிகள் இல்லை. மின்சாரம் மலசலகூட வசதிகள் இல்லை. அவற்றைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்.

மாவட்டத்தில் 106 தேர்தல் சாவடிகள் தமிழருக்கானது. அவறறினூடாக எம்மவர்கள் ஏனையஇனத்தவர்களுக்கு வாக்களிக்கின்றனர். இதனால் ஏதாவது பிரயோனம் உள்ளதா? எனவேதான் தலைவர் சஜித் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் சுபீட்சத்திற்காக என்னை மட்டும் நியமித்துள்ளார்.
எனவே சும்மா வெறுமனே குருதியை சூடேற்றி பாராளுமன்றுக்கு செல்வதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. எமக்கான ஒரே தீர்வு பொருளாதார அபிவிருத்தியே. அதற்காக கைகொடுங்கள். 


காரைதீவு  நிருபர் சகா

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.