கடந்த அரசாங்கம் பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுத்த சலுகைகளை தற்போதைய அரசாங்கம் இல்லாமல் செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஹொரணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கவுள்ளதாகவும் அதற்கு எவ்வித தீர்வும் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க எவ்விட வௌிநாடும் இல்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment