தனது சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்ற கருணா!! - சட்டமானி.அ.நிதான்சன் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, June 25, 2020

தனது சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்ற கருணா!! - சட்டமானி.அ.நிதான்சன்

தனது   சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்ற  கருணாவை   ஏற்கலாமா ? இ. த. அ. கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் சட்டமானி.அ.நிதான்சன் .





தனது சொந்த வாக்கை தனக்கே போட வக்கற்றவரையும் கிழக்கு செயலணி பிரச்சனையில் மௌனியாக இருப்பவரையும்  ஏற்கலாமா ? என
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர்  ச ட்டமானிஅருள்.நிதான்சன் பெரியநீலாவணை தொடர்மாடித் தொகுதி வளாகத்தில்தேர்தல் பரப்புரையாற்றுகையில் கேள்வியெழுப்பினார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் எஸ்.கணேஸை ஆதரித்து பெரியநீலாவணை தொடர்மாடித் தொகுதி வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி யெழுப்பினார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்

அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க வேண்டும் என இறங்கியுள்ள முன்னாள் அரை அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் .முப்பது வருட பிரதேச செயலக பிரச்சனையை அறியாதவர் போல் அரை அமைச்சராக கடந்த கால அரசில் இருந்துவிட்டு இன்று எல்லாம் தெரிந்தவர் போல் நடிக்கின்றார். இவரின் நடிப்பின் பின்னால் செல்ல அம்பாறை மாவட்டத் தமிழர்கள் மடையர்கள் அல்ல.

அரசியல் தீர்வு தொடர்பிலும் இனப் பிரச்சனைகளை தீர்க்கவும் இவரிடம் என்ன வகையான மாற்று உள்ளது என சொல்ல முடியாமல் தேர்தல் பிரகடனம் வெளியிட்ட இவர் இன்று  தேசியக் கொள்கையில் இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சிக்க தகுதியற்றவர். முடிந்தால் தனது வாக்கை தனக்கு இட்டு காட்டட்டும் சொந்த வாக்கையே மட்டு மாவட்டத்தில் இடப்போகும் நபர் இன்று அம்பாறையை மீட்கப்போகின்றார் என ஏமாற்றி திரிகின்றார்.

மாமனிதர் சந்திநேரு அவர்களின் தொடர்பிலும் கொலையாளிகள் என மக்கள் ஊகம் கொள்ளும் சிலர் சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனும் விசனமும் மக்கள் மத்தியில் உலாவுகின்றது.அதனை மக்கள் மறக்கவில்லை. அதற்கான தண்டனை கிடைக்கும் எனும் நம்பிக்கையில் உள்ளனர். ஆகவே தேசிய உணர்வோடு அதன் வலியோடு இன்றும் மக்கள் உள்ளனர். 60ம்கட்டை கனகர்கிராமத்தை எட்டிபார்க்காதவர்கள் இன்று கிழக்கின் மீட்பர்களாக வெளிகாட்ட முனைகின்றனர்.

இன்று கிழக்கில் ஜனாதிபதியின் செயலணியில் இந்த அரசில் பிரதான பங்குவகித்த விநாயகமூர்த்தி முரளிதரன் உள்வாங்கப்படவில்லை.இவரால் தமிழருக்கு நல்லது நடக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.ஆகவே இவரின் போலித்தனமான தென் இந்திய நடிகர்களின் படத்தினைப் போல் செய்யும் அரசியலுக்கு தக்கபதிலடி அம்பாறை மாவட்ட மக்களால் வழங்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலும் கலந்துகொண்டுரையாற்றினார்.

(காரைதீவு சகா)

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.