சம்மாந்துறை வலயத்தில் பயிலும் தரம் ஒன்று மாணவர்களுக்குரிய பாடசாலை சீருடைக் கூப்பன்கள் நேற்று வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீமினால் வழங்கி வைக்கப்பட்டன.
2020 இல் தரம் ஒன்றிற்குச் சேர்ந்த மாணவர்களுக்கான இலவச சீருடை கூப்பன் மற்றும் தரம் 01 மாணவர்களுக்கான செயற்பாட்டு நூல் என்பன அதிபர்களிடம் வழங்கிவைக்கப்பட்டன.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் மற்றும் கல்வி முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிபபாளர் செல்வி வி. நிதர்சனி ஆகியோர்களினால் அதிபர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த பாடசாலை சீருடை கூப்பன்களை பொறுப்பான வகுப்பாசிரியர்கள் ஊடாக தரம் 1மாணவர்களது பெற்றோர்களை அழைத்து விநியோகிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
(காரைதீவு நிருபர் சகா)
No comments:
Post a Comment