கிளிநொச்சிக்கும் பரவிய வெட்டுக்கிளிகள் ............ - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, June 3, 2020

கிளிநொச்சிக்கும் பரவிய வெட்டுக்கிளிகள் ............




குருநாகல் மாவத்தகம பகுதியில் அடையாளங் காணப்பட்ட வெட்டுக்கிளி வட மாகாணத்தில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாவும் விவசாய பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அந்த வெட்டுக்கிளி தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெட்டுக்கிளி பரவியுள்ளது.
எனினும், வெட்டுக்கிளி பரவல் தகவல் பற்றி ஆராய்ந்து வருவதாக வடக்கு விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வழமையாக வடக்கில் காணப்படுகின்ற வெட்டுக்கிளிகளையும் புதிதாக பரவி வருகின்ற வெட்டுக்கிளிகளாக விவசாயிகள் கருதுவதாக திணக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இது சம்பந்தமாக விரிவான பரிசீலனை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கிரிந்த புஹூல்வெல பகுதியில் ஒரு பெர்ச் அளவான நிலத்தில் 3 அடி உயரமுள்ள புல் புதரில் சுமார் 1,000 வெட்டுக்கிளிகள் குவிந்துள்ளதாகவும், அருகிலுள்ள வாழைத் தோட்டத்தை அவை நாசம் செய்துள்ளதாகவும், ஒரு வாழைமரத்தை முற்றாக தின்று தீர்த்து விட்டதாகவும் விவசாய சேவைகள் வட்டாரங்கள் தெரிவித்தன. உருகமுவ பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நான்கு அடி உயரமான புதரில் சுமார் ஐநூறு வெட்டுக்கிளிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து இன்று குறித்த பகுதிகளில் பெரதெனிய விவசாய கல்லூரியின் மேற்பார்வையில் இரசாயன மருந்து தெளிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.