அவுஸ்திரேலியாவிலிருந்து 2500 பசு மாடுகளை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் இந்த எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றார்.
முழுமையாக மோசடி செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை செய்யவுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து பசுக்களை இறக்குமதி செய்தால் அதில் அதிகமானவை இலங்கையின் காலநிலை மற்றும் பல விடயங்களினால் இறந்துபோய்விடும் என்றும் தேரர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment