அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின் போதே அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பாரம்பரிய முறைமைகளில் இருந்து விலகி அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்கு மாற்றுவதற்கு தேவையான திட்டங்களை விரைவாக தயாரிக்க வேண்டும் என்பதுடன் கடந்த 05 வருட இறுதியில் நிறுவனத்தை பொறுப்பேற்கும் போது இருந்த நிலை மற்றும் தற்போதைய நிலை பற்றி அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு வருடத்திலும் செய்ய வேண்டிய அபிவிருத்தி வேலைகளை அந்த வருடத்திற்கு முன்னதாகவே திட்டமிட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்
No comments:
Post a Comment