கிழக்கு மாகாணத்தில் கடந்த 10தினங்களாக களைகட்டியிருந்த கற்புக்கரசி கண்ணகை அம்மனின் திருக்குளிர்த்தி வைகாசிச்சடங்கு நேற்றுடன் நிறைவுபெற்றது.
கிழக்கில் வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி பாடும் சடங்கு நேற்றுஅதிகாலை 4.30மணியளவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
கொரோனா நடைமுறைக்கிணங்க மட்டுப்படுத்தப்பட்டஅளவில் நடைபெற்ற வைகாசிச்சடங்கு ஆரவாரமில்லாமல் ஆனால் சகலசடங்குசம்பிரதாயங்களுடன் நடைபெற்றுள்ளது.
ஆலயகப்புகனார் தர்மகர்த்தாக்கள் பரிபாலனசபையின் சகிதம் திருக்குளிர்த்தி பாடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
- காரைதீவு நிருபர் சகா
No comments:
Post a Comment