வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, June 5, 2020

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை...



வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குடிவரவு நடைமுறைகளுக்கு முன்னர், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தனியான ஒரு இடத்திற்கு அனுப்பி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொவிட் 19 ஒழிப்பு விசேட செயலணி மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுடன் நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.

வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக மத்திய கிழக்கில் இருந்து நாட்டுக்கு வருவோர்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்தும் போதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் போதும் முகம்கொடுக்க வேண்டியுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான வழிகள் குறித்து நேற்றைய கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது.
PCR முடிவுகளை பெற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதற்கு விமான நிலைய வளாகத்திலேயே பரிசோதனைக் கூடமொன்றை தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

நோய்த்தொற்று நீண்ட காலம் இருக்க முடியும் என்பதாலும் அதனைத் தொடர்ந்தும் விமான நிலைய வளாகத்தில் பரிசோதனைக் கூடமொன்று இருப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.