எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இன்று 74ஆவது பிறந்தநாள். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, June 4, 2020

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இன்று 74ஆவது பிறந்தநாள்.





கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள இவர் குறித்த சில முக்கியத் தகவல்கள் 


எஸ்.பி.பியின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். இளம் வயதிலேயே இவருக்கு இசையின் மீது அளாதி பிரியம்.


இளம் வயதில் தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அந்தப் பரிசுதான் பாடகராக வேண்டும் என்கிற ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது.


இவருடைய தாய்மொழி தெலுங்கு. தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் 'ஶ்ரீ ஶ்ரீ மரியாத ராமண்ணா' என்கிற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.


1969ஆம் ஆண்டு சாந்தி நிலையம் படத்திற்கு 'இளையகன்னி' என்கிற பாடலைப் பாடி தமிழில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.
'
இளையகன்னி' படம் வெளிவருவதற்கு முன்னரே 'அடிமைப்பெண்' படத்தில் 'ஆயிரம் நிலவே வா' என்கிற பாடல் மூலம் இவரது குரல் தமிழ் உலகிற்கு கேட்க ஆரம்பித்துவிட்டது.


மின்சாரக்கனவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தங்கத் தாரகை மகளே' என்கிற பாடலுக்காக அவர் தேசிய விருதைப் பெற்றார்.


இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இவர் நான்கு மொழிகளில் பாடிய வெவ்வேறு பாடல்களுக்கு ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கிறார்.


இவர் பாடகர் மட்டுமல்ல சில படங்களுக்கு டப்பிங்கும் கொடுத்திருக்கிறார். மேலும், நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.


உலகிலேயே அதிகமான திரைப்படப் பாடல்கள் பாடிய பாடகர் என்கிற கின்னஸ் சாதனையையும் செய்துள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.


அதுமட்டுமில்லாமல் ஒரே நாளில் 19 பாடல்களைப் பதிவு செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்தவர்.


கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவர். இவருடைய ஆர்வத்தைப் பார்த்து சச்சின் டெண்டுல்கர் அவருடைய கையெழுத்திட்ட பேட்டை பரிசாக எஸ்.பி.பிக்கு அளித்திருக்கிறார்.


ரஜினிகாந்த், இளையராஜா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பெற்றுள்ள 'இந்தியன் பிலிம் பர்சனாலிட்டி ஆஃப் தி இயர்' விருதை 2016ஆம் ஆண்டு நடந்த 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இவர் பெற்றார்.


இந்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பதமபூஷன் விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு ஓவியங்கள் வரைவதில் மிகுந்த பிரியம் உண்டு. அதே போன்று நன்றாக புல்லாங்குழல் வாசிப்பார்.


பாடகராக மட்டுமல்லாது இசையமைப்பாளர், பின்னணிக் குரல் கலைஞர், குணச்சித்திர நடிகர் ஆகிய பிரிவுகளிலும் ஆந்திர அரசு வழங்கும் நந்தி திரைப்பட விருதுகளை எஸ்.பி.பி பெற்றுள்ளார்.


வெவ்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.