ஆஸ்திரேலியாவில் அதிவேக இணைய சேவை பதிவுசெய்யப்பட்டதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மோனஷ் பல்கலைக்கழகம், ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகம், மற்றும் ஆர்எம்ஐடி பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களின் தரவுகள் இணைய வேகத்தை விநாடிக்கு 44.2 டெராபைட்ஸ் என பதிவு செய்தன.
இந்த வேகத்தில், பயனாளர்கள் 1,000 ஹை டெஃபினிஷன் படத்தை ஒரு விநாடிக்குள் பதிவிறக்கம் செய்ய முடியும்.
பிரிட்டனின் தகவல் பரிமாற்றம் ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காமின் சமீபத்தில் செய்த ஆய்வின் தரவுகள் படி பிரிட்டனில் பிராட்பேண்ட் வேகத்தின் தற்போதைய வேகம் விநாடிக்கு 64 மெகாபைட்கள் ஆகும்.
ஆஸ்திரேலியா, இணைய சேவை வேகத்தின் அடிப்படையில் பட்டியலிடப்படும் நாடுகளில், எப்போதும், ஓரளவு இணைய வேகம் கொண்ட நாடாகத்தான் இருக்கும். மேலும் அங்கே இணைய சேவை மெதுவாக உள்ளது என்ற புகாரே பயனாளர்களிடமிருந்து அடிக்கடி வரும்.
ந்த புதிய அதிவேக இணைய சேவை ஏற்கனவே இருந்த தகவல் பரிமாற்ற சாதனங்களில் உள்ள 80 லேசர்களுக்கு பதில், மைக்ரோ-கோம்ப் எனப்படும் சின்ன பொருளை மாற்றியதன் மூலம் பெற முடிந்தது.
இந்த மைக்ரோ-கோம்ப் எனப்படும் சின்ன சாதனம் ஆய்வகத்திற்கு வெளியே ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தகவல் பரிமாற்ற கட்டமைப்பில் பொருத்தப்பட்டது.
உலகில் ஆப்டிகல் ஃபைபர் பிராட்பேண்ட்களில் உள்ள ஆப்டிகல் சிப் மூலமாக உருவாக்கப்படும் அதிவேக இணைய சேவை இதுவே ஆகும்.
வரும்காலத்தில் இணைய சேவை எப்படி இருக்கும் என்பதற்கான கற்பனையை இந்த கண்டுபிடிப்பு கொடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய குழு கூறுகிறது.
No comments:
Post a Comment