சினிமாவில் 5000 கோடி பிசினஸ் அவுட்.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 8, 2020

சினிமாவில் 5000 கோடி பிசினஸ் அவுட்..


கடந்த 3 மாதகாலமாக சினிமாத்துறை முற்றிலும் முடங்கியுள்ளது கிட்டத்தட்ட 5000 கோடி அளவுக்கு பிஸினஸ் படுத்துவிட்டது என தயாரிப்பாளர்கள் தரப்பில் குமுறி வருகின்றனர். எப்போதுமே பணம் கொழிக்கும் இடமாக இருந்தது சினிமா.ஒரு நாளைக்கு 100 கோடிவரை பணம் புரளும் இடம் என்பதும் உண்மைதான். அதுமட்டுமில்லாமல் நடிகர்களின் சம்பளம் 50 கோடி, கோடி என ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக படப்பிடிப்புகள் தியேட்டர்கள் என எதுவுமே இயங்காததால் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க சொல்லி டார்ச்சர் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இனி அவ்வளவு பணம் கொடுத்து படம் எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கை விட்டுவிட்டார்களாம். இதனால் கோடிகளில் சம்பளம் வாங்கிய நடிகர் நடிகைகள் இனி சம்பாதிக்க வாய்ப்பு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சினிமா துறையில் அடிமட்டத் தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் அவர்களுக்கு அரசு எந்த ஒரு உதவியும் அளிக்கவில்லை எனவும் தயாரிப்பாளர் சங்க நபர் டி சிவா புலம்புகிறார். 20 லட்சம் கோடி திட்டத்தில் ஒன்றுகூட சினிமா தொழிலாளர்களுக்கு நல்லது செய்யும் விதத்தில் அமையவில்லை என வருத்தப்படுகிறார்.

சினிமாவிலும் தினக்கூலிக்கு போராடும் ஆட்கள் இருப்பதால் அவர்களுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்தால் நல்லா இருக்கும் என எதிர்பார்த்தோம். இதை அரசு தான் செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக சினிமா இருந்த போதும் எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருப்பது சரியில்லை என்கிறார்.மேலும் இனி நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடையாது எனவும், சொகுசான ஹோட்டல்கள், விமான பயணங்கள் எல்லாமே ரத்து செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இனி ஒரு படம் வெளியாகி எவ்வளவு லாபம் வருகிறதோ அதில் இருந்துதான் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு எத்தனை நடிகர்கள் ஒத்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கொரானா தாக்கத்தினால் ஆட்டம் போட்டு சிறு வண்டு நடிகர்கள் முதல் பெரிய நடிகர்களின் கொட்டங்கள் அடங்கி விட்டதாக தெரிகிறது. இனி சினிமா தொழில் முன்னேறுவதற்கு சிரமம்தான் என பலரும் இப்பவே தயாரிப்பு தொழிலை விட்டு விட்டார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.