அம்பாறை புத்தங்கல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்று நீண்ட காலமாக விபச்சார விடுதியாக நடாத்தப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பொலிசாரிடம் பலமுறை முறைப்பாடுகள் தெரிவித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அம்பாறை தலைமையக போலீசார் இந்த விபச்சார விடுதியை சோதனை செய்வதற்காக நீதிமன்றில் ரகசிய அனுமதியை கடந்த மே மாதம் 21 ம் திகதி பெற்று குறித்த விடுதியில் 22 ம் திகதி பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இதன்போது விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரையும் விடுதியை முகாமைத்துவம் செய்து நடாத்தி வந்த பெண் உட்பட இருவரையும் கைது செய்து அம்பாறை நீதவான் நீதிமன்றத்தின் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர்களை நேற்று(ஜூன்-03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்
இவர்கள் மீது பொலிசார் குற்றப்பத்திரம் தாக்குதல் செய்ததையடுத்து நேற்று புதன்கிழமை நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டபோது விடுதி முகாமையாளரான பெண் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவருக்கு நீதி சட்டத்தில் இருக்கும் அதிகூடிய தண்டப்பணமாக இரண்டு இலட்சம் ரூபாவும் விபச்சாரத்தில் ஈடுபட் பெண்ணுக்கு 100 ரூபாவும் அபராதமாகசெலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment