அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை.." - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, May 19, 2020

அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை.."
பொதுத்தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் 20ம் திகதி நடத்துவதாக அறிவித்து வெளியாக்கப்பட்ட வர்த்தமானி மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானிக்கும்; எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை காலை வரை பிற்போடப்பட்டுள்ளது.


பிந்தியவை...
இந்த மனுக்கள் நேற்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் புவனகே அலுவிஹாரேஇ சிசிர டி ஆப்ருஇ பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டது.


இதன்போது குறித்த மனுக்களை இன்று முற்பகல் 10 மணிக்கு தொடர்ந்து விசாரிக்க நீதியரசர்கள் ஆயம் நேற்று தீர்மானித்தது.


சட்டத்தரணி சரித குணரத்னஇ ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 6 தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.


இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியஇ அதன் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்திரணி என்.ஏ.ஜே.அபேசேகரஇ பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்இ ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரஇ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.