கொரோனா நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முயற்சித்தபோது தப்பியோடியுள்ளார்,
சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை ஓடிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடி நின்றுள்ளார்.
அவர் முககவசம் அணியாமல் இருந்ததால் அவரை காவல் துறையினர் விசாரித்துள்ளனர். அந்த நபர் மூன்று நாட்களுக்கு முன்னர் துபாயிலிருந்து வந்ததும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அவருக்கு உத்தரவிட்டுள்ளது தெரியவந்ததையடுத்து. கொரோனா பாதுகாப்பு உடையில் இருந்த ஊழியர்கள் அவரை துரத்திப் பிடித்து கை, கால்களை கட்டி ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்
. 

அந்த நபர் மீது நோய் தொற்று ஏற்படுதல் ஆகிய குற்றங்கள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சுகாதார ஊழியர்கள் துரத்திப் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment