தற்போது 3 ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் இதுவா…? - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, July 9, 2020

தற்போது 3 ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் இதுவா…?


நடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம்!
பிரபல நடிகை வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணமாகும். 39 வயதான வனிதா கடந்த 2000ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி நடிகர் ஆகாஷை முதலாவதாக திருமணம் செய்தார்.


சமுத்திரம், தாமிரபரணி, பாண்டவர் பூமி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஆகாஷ்.

இந்த தம்பதிக்கு விஜய ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிதா என மகளும் உள்ளனர்.

இதன் பின்னர் வனிதா – ஆகாஷ் தம்பதி 2007ல் விவாகரத்து பெற்றனர்.

இதை தொடர்ந்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் ஜெயராஜன் என்பவரை அதே ஆண்டில் வனிதா இரண்டாம் திருமணம செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2009ல் ஜெய்னிதா என்ற மகள் பிறந்தார்.
இதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த வனிதா – ஆனந்த தம்பதி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினர்.


இதை தொடர்ந்து 2012ல் இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட தகராறின் போது, ஆனந்தும் அதில் ஈடுபட்டதாகவும் அதனால் தனக்கு நிம்மதி பறிபோனதோடு, நடிப்பு வாய்ப்பும் கைநழுவி போனதாகவும் அதனால் ஏற்பட்ட சண்டையில் கணவரை விவாகரத்து செய்ததாகவும் வனிதா பின்னாளில் தெரிவித்தார்.இதையடுத்து பிரபல நடன இயக்குனர் ராபர்டுடன் கடந்த 2013ல் டேட்டிங்கில் இருந்தார் வனிதா. இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தை இயக்கி தயாரித்தனர்.

2017ல் இருவரும் பிரிந்தார்கள், இதன் பின்னர் VFX இயக்குனர் பீட்டர் பவுலுடன் காதல் வயப்பட்ட வனிதா அவரை கடந்த 27ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.