குற்றச்சாட்டை நிராகரித்த ரட்ணஜீவன் ஹூல் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 20 மே, 2020

குற்றச்சாட்டை நிராகரித்த ரட்ணஜீவன் ஹூல்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி தேர்தல் ஆணைக்குழுவுக்கு பிரவேசித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் நிராகரித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு இது தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைய தாம் அங்கு சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பதற்காக தனிமைப்படுத்தல் நிறைவடைந்த தமது மகளுடன் நேற்று முனதினம் ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் சென்றிருந்தார்.
இது தொடர்பில் தகவல் அறிந்த பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் பணிக்குழு உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பினை தெரிவித்ததுடன் அங்குள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் தலையீட்டுடன் அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு வளாகம் முழுமையாக தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் மகள் வெளிநாடு சென்று அண்மையில் நாடு திரும்பியிருந்ததுடன் 14 நாட்கள் விருந்தகம் ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையுடன் அவரது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்தது.
இந்த நிலையில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தமை காரணமாக அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வீட்டிற்கு செல்ல தயாராகியிருந்தனர்.
எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வழியில் யாழ்ப்பாணத்திலுள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றில் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தமது மகளுடன் ராஜகிரியவிலுள்ள ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தார்.
இதனையடுத்து அவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிக்குழு உறுப்பினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தாம் பயணித்த வாகனம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.