8 மாவட்டங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 716 பேர் பாதிப்பு - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, May 20, 2020

8 மாவட்டங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 716 பேர் பாதிப்பு

அம்பன் சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளால் 8 மாவட்டங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அனர்த்த நிலைமைகளால் இதுவரை 2 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 279 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்த 138 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 586 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அதிக மழை காரணமாக உயர்வடைந்த களு, கிங், மற்றும் நில்வளா கங்கைகளின் நீர் மட்டம் படிப்படியாக குறைவடைந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் தாழ்நில பகுதிகளில் நீர் மட்டம் தொடர்ந்து காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பெய்து வரும் மழையுடன் நீர் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் நீர்மின் உற்பதி 31.17 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று மாலை பெய்த பலத்த மழையுடன் டிக்கோயா ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்தால் அதன் ஊடாக நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலம் உன்று உடைந்துள்ளது.
இதன் காரணமாக தரவலை தோட்டத்திற்குள் பிரவேசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மஸ்கெலிய நகரில் வாகனங்கள் வெளியேறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் நேற்றைய தினம் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.<br /><br />மஸ்கெலிய நகரில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நகரக்குள் பிரவேசிப்பதற்கு ஒரு ஒழுங்கும், நகரில் இருந்து வெளியேறுவதற்கு உள் வீதி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்த நிலையில் வெளியேறும் வீதியிலேயே இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மண்மேடு சரிவு மற்றும் பாறை புரள்வால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள போதிலும் காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை , கொழும்பு, கேகாலை, குருநாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ள இடங்களுக்காக விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை இன்று பிற்பகல் 2.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அம்பன் சூறாவளி காரணமாக பங்களாதேஸில் சுமார் 2 மில்லியன் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பன் சூறாவளி தற்போது வங்காள விரிகுடா ஊடாக இந்தியா மற்றும் பங்களாதேஸ் திசை நோக்கி பயணிப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இடம்பெயர்ந்துள்ள குறித்த மக்கள் 12 அயிரத்து 78 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அம்பன் சூறாவளியால் இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் வாழும் சுமார் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பல பாகங்களிலும் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.