நாட்டில் இன்றைய தினமும் 20 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,319 ஆகும்.
இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 577 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருவதுடன் 75 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.மேலும், கொரோனா தொற்றுக்கு இலக்காகி 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment