வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலைச் சேர்ந்த இருவர் பருத்தித்துறை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்ட உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தை சேர்ந்த இராசேந்திரம் குலவீரசிங்கம், செல்வகுலசிங்கம் ரதீஸ்வரன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலில் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பெண்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்திருந்தது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். | |
வடமராட்சி கிழக்கில் இன்று காலை பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது |
Post Top Ad
Wednesday, May 27, 2020

Home
Unlabelled
வடமராட்சி குடத்தனையில் இருவர் கைது....
வடமராட்சி குடத்தனையில் இருவர் கைது....
Share This

About Celina
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
ஆசிரியர் பற்றி
அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்
No comments:
Post a Comment