விவசாய பயிர்களை சேதப்படுத்தும் பட்டாம்பூச்சி. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 2, 2020

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் பட்டாம்பூச்சி.




குருநாகல் - மாவத்தகமவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒரு வகையான வெட்டுகிளிகள், அந்த பகுதியில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகளில் பரவியுள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த நிலையில், மாவத்தகம பிரான்சிஸ்கா பகுதியில் நேற்றைய தினம் இந்த வகையிலான வெட்டுகிளிகள் முதன் முறையாக இனம் காணப்பட்டதனை தொடர்ந்து, இன்றையதினம் மாவனல்லை - அத்னகொட பிரதேசத்தில் பரவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெட்டு கிளிகள் மரவெள்ளி, தென்னை மரம், சோளம், வாழை போன்ற பயிர்களை தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில், அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது குறுநாகல் மாவட்டத்தின் விவசாய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளைபொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் ஒரு வகையான பட்டாம்பூச்சி இனங்கள் பரவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.