
பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெற்றுக்கொள்வோர் குறித்த முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள மக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானிய மகா ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதன்படி பேராசிரியர் ரவி சில்வா, பேராசிரியர் மொஹான் எதிரிசிங்க, பேராசிரியர் ரமணி முனேசிங்க, கஜன் வாலோபிள்ளை, மருத்துவர் சிகந்தினி கனகசுந்தரம் மற்றும் மொஹமட் ஹஸ்ரத் ஹலீம் ஒஸ்மான் ஆகியோருக்கு பிரித்தானிய பேரரசின் ஆணைக்குழு (CBE) விருது வழங்கப்படுகிறது.
பேராசிரியர் ரவி சில்வா, கடந்த மூன்று தசாப்தங்களாக அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அவரது சிறந்த சேவைகளுக்காக CBE விருது பெறவுள்ளார்.
பேராசிரியர் எதிரிசிங்க, சுகாதாரத்துறையில் மேம்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய முறைகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளார். மயக்க மருந்து, தயாரிப்பு மற்றும் தீவிர சிகிச்சை ஆகியவற்றில் ஆற்றிய சேவைகளுக்காக பேராசிரியர் ரமணி முனேசிங்கவுக்கு விருது வழங்கப்படுகிறது.கஜன் வாலோபிள்ளை, சமத்துவம் மற்றும் சமூக ஒற்றுமைக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்காக விருது பெறுகிறார்.
நுண்ணுயிரியல், தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது ஆற்றிய சேவைகளுக்காக மருத்துவர் சிகந்தினி கனகசுந்தரத்துக்கு விருது வழங்கப்படுகிறது. இங்கிலாந்திலுள்ள இலங்கை சமூகத்துக்கு ஆற்றிய சேவைகளுக்காக மொஹமட் ஹஸ்ரத் ஹலீம் ஒஸ்மானுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment