கிழக்கில் ஆயிரத்தைதாண்டி 1017 கொரோனாதொற்றுக்கள்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, December 28, 2020

கிழக்கில் ஆயிரத்தைதாண்டி 1017 கொரோனாதொற்றுக்கள்!

கிழக்கில் ஆயிரத்தைதாண்டி 1017 கொரோனாதொற்றுக்கள்!

 கல்முனையில் 717 மட்டக்களப்பில் 131 திருமலையில் 122 அம்பாறையில் 24.


கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத்தாண்டியுள்ளது. அங்கு நேற்றுவரை 1017 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

திருமலையில் கண்டுபிடிக்கப்பட்ட 131 தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்தே கிழக்கின் நிலைமை இவ்விதம் அதிகரித்துள்ளது. காததான்குடியிலும் திடீரென 15பேராக தொற்று அதிகரித்துள்ளது.

இறுதியாக காத்தான்குடியைச்சேர்ந்த 54வயதுடைய ஒருவர் கொரோனாவுக்கு பலியாகிள்ளார். இது மட்டு.மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம். கிழக்கில் 5ஆவது மரணம்.

கிழக்கி;ல் கடந்த 24மணித்தியாலங்களில் 30பேர் தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கூடிய 08 பேர் காத்தான்குடியிலும் அடுத்ததாக மூதூர் மற்றும் பொத்துவில் தலா 06பேரும் அட்டாளைச்சேனையில் 5பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.

இதுவரை சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது  அட்டாளைச்சேனை காத்தான்குடியில் 5 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.


திருமலையில்...

திருமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக இரட்டை இலக்கங்களுள் இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை  3இலக்கங்களாகஅதாவது 122ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 66பேரும் மூதூரில் 33பேரும் கிண்ணியாவில் 9பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.


கல்முனை மாநகரில்..

அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 175 தொற்றுக்களாக  அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கி;ல் 131பேரும் சாய்ந்தமருதில் 33பேரும் கல்முனை வடக்கில் 11பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனைக்குடியை மையமாகக் கொண்ட கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக 131 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 131பேரும் கல்முனை பிராந்தியத்தில் 717பேரும் திருமலை மாவட்டத்தில் 122பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 24பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.


தனிப் பிரிவுகள் ரீதியாக....

கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள் 24பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 717பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 676பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

தனியாகப்பார்க்குமிடத்து  அக்கரைப்பற்றில் மட்டும் 304பேரும் அடுத்ததாக கல்முனை தெற்கில் 131 பேரும் அட்டாளைச்சேனையில் 65பேரும் கோறளைப்பற்று மத்திபிரிவில்  தொற்றுக்கள் 70பேரும் பொத்துவிலில் 65பேரும் திருமலையி;ல் 66பேரும்  இனங்காணப்பட்டிருந்தனர்.

அடுத்தபடியாக  சாய்ந்தமருதில் 33பேரும்  மூதூரில் 33பேரும் ஆலையடிவேம்பில் 27பேரும் இறக்காமத்தில் 23பேரும்; களுவாஞ்சிகுடியில்  20பேரும் காத்ததான்குடியில் 15பேரும் திருக்கோவிலில் 14 பேரும் சம்மாந்துறையில் 14பேரும் கல்முனை வடக்கில் 11பேரும்; நிந்தவுரில் 12பேரும் ஏறாவூரில் 10பேரும்  இனங்காணப்பட்டிருந்தனர்.


சிகிச்சை நிலையங்களில் 2265 அனுமதி

கிழக்கிலுள்ள 06 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 489கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (27.12.2020) ஞாயிற்றுக்கிழமை  வரை 2265பேர் மேற்படி 6 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 1763பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.11பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.இன்னும் 75கட்டில்கள் எஞ்சியுள்ளன.

காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 768பேர் அனுமதிக்கப்பட்டு 618பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 146பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.இன்னும் 26 கட்டில் தேவையாகவுள்ளன.

மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 76 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 74 பேரும் பதியத்தலாவ சிகிச்சை  நிலையத்தில்  37பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 86 பேரும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 72 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


31158பேருக்கு பிசிஆர் பரிசோதனை

இதுவரை கிழக்கில்     31158பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள் அக்கரைப்பற்று கொத்தணிப்பகுதியில் மட்டும் 15509 பிசிஆர் அன்ரிஜன்ற் சோதனை நடாத்தப்பட்டது.

கல்முனைப்பிராந்தியத்தில் 17328 சோதனைகளும் மட்டக்களப்பில் 7822 சோதனைகளும் அம்பாறையில் 2543 சோதனைகளும் திருகோணமலையில் 3465சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.----------

(வி.ரி.சகாதேவராஜா)


No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.