கொரோனா தீநுண்மியின் அச்சுறுத்தல் காரணமாக 5மாதங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை வழமைநிலைமைக்கு திரும்பவைக்க பெற்றோர் ஆசிரியர்களுடனான சந்திப்புகளை கல்வித்திணைக்களம் மேற்கொண்டுவருகிறது.
அந்தவகையில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணி;ப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீமின் அறிவுரைப்பின்கீழ் கல்வி அதிகாரிகள் சகல பாடசாலைகளிலும் இத்தகைய பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வலயத்தில் பின்தங்கிய நாவிதன்வெளிக்கோட்டத்திலுள்ள நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் அதிபர் எஸ்.பாலசிங்கன் தலைமையில் பெற்றோர்கூட்டமும் பின்பு ஆசிரியர்கூட்டமும் நடைபெற்றன.
குறித்த பாடசாலையின் வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளரும் வலய உதவிக்கல்விப்பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா பிரதான பங்கேற்று வழமைக்குகொண்டுவருதலின்போது பெற்றோரினதும் ஆசிரியரினதும் பங்களிப்புகள் பற்றி பூரணவிளக்கமளித்தார்.
இதேவேளை க.பொ.த. சா.தர மாணவர்களது பெற்றோர்களுக்கு குறுகிய காலத்துள் கூடியபாடப்பரப்பை பூர்த்திசெய்வதற்கான பங்களிப்பு பற்றியும் விரிவான விளக்கமளிக்கப்பட்டது. பெற்றோர்கள் பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தனர்.
ஆசிரியர்களும் புதுப்புது உத்திகளைக்கையாண்டு குறுகியகாலத்துள் கூடியபாடப்பரப்பை சுமையற்றவித்தில் மாணவர்க்கு கற்பித்தல் தொடர்பில்; கலந்துரையாடப்பட்டு 13ஆசிரியர்களுக்கு தரப்பொறுப்பாசிரியர்களாக 25 பொறுப்புகள் அடங்கிய நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.
பூர்த்திசெய்யப்படவேண்டிய அலகுகள் தொடர்பில் பாடரீதியாக தனித்தனியாக கலந்துரையாடப்பட்டு பரிகாரம் காணப்பட்டன.
பிரதிஅதிபர் திருமதி நிலந்தினிரவிச்சந்திரன் பிரிவுப்பொறுப்பாசிரியர் கே.குணசேகரன் ஆகியோரும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment