4 மில்லியன் ரூபா பெறுமதியான போதைவில்லைகளுடன் இருவர் கைது... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, September 8, 2020

4 மில்லியன் ரூபா பெறுமதியான போதைவில்லைகளுடன் இருவர் கைது...

 

கொழும்பு – முகத்துவாரத்தில் 18,900 போதைவில்லைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைவில்லைகளுடன் லொறியில் பயணித்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 4 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாணந்துறை, தெரணியகல, வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.