தமிழ் சினிமாவில் முதல் படம் கூட வெளியாகாமல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிய நடிகைகள் பலரும் மலையாள மொழியை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
அந்த வகையில் தனுஷ் படத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இதனால் சம்பளத்தை ஏற்றி விடுவாரோ என சோகத்தில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.கலைப்புலி எஸ் தாணு, தனுஷ் கூட்டணியில் அசுரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தற்போது கர்ணன் எனும் படத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் தனுஷுடன் முதல்முறையாக ரஜிஷா விஜயன் என்பவர் நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம். இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
No comments:
Post a Comment