கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி பாடசாலைகளுக்கு வழங்கி வைப்பு.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நாவிதன்வெளி பிரதேச முன்பள்ளி பாடசாலைகளுக்கு வழங்கி வைப்பு..

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அம்பாறை  நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வரும் 10 முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு  வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு நாவிதன்வெளி  பிரதேச செயலக  சிறுவர் பாதுகாப்பு   உத்தியோகத்தர் ஜெ.மயூரன்  ஏற்பாட்டில்   பிரதேச செயலக வளாகத்தில்   இன்று இடம்பெற்றது.

இவ் உபகரணங்களானது மகளிர் சிறுவர் விவகார மற்றும் சமுக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக உலக வங்கியின் நிதி உதவியுடன் முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேசத்தில் 10 முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் மீண்டும் முன்பள்ளி பாடசாலைகளை ஆரம்பிக்கும் வகையில் பாதுகாப்பு முன்னாயத்தங்களை உறுதிப்படுத்தும் நோக்கில்  முள்பள்ளிப் பாடசாலைக்கு உடல் வெப்பம் பரிசோதிப்பதற்கான கருவி மற்றும் கைகழுவதற்கான உபகரணங்கள்  என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில்  நாவிதன்வெளி  பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன்  உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா   மற்றும் மகளிர் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியைகள் என பலரும்  பங்குபற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.